புதுப்பிக்கும் நினைவுகள்
Saturday, December 27, 2008
Wednesday, June 25, 2008

தற்கொலை.
----------
----------
ஒவ்வொரு இரவும்
என்னை ஆர்ப்பறித்து
புழுவாய் துடிக்க வைக்கின்றது
உன் வார்த்தையின் உரசல்.
விடிதலை தேடித் தேடிக் காலம்
ஓடிக்கொண்டு இருக்கின்றது.
என்னை கனியவைக்க
மறுக்குபோது.....
கால தேவனும் என்னை
அழைக்க மறுக்கின்றான்.
ஒரு பிடி சோற்றுக்காய் இவ்வுலகில்
நான் அடிமையாய் வாழ்வதா..?
புரிந்து கொள்ள மறுக்கும்
உனக்கு என் முந்தானையகொடுப்தா..?
காமத்துக்கு அடிமையாகாத என்னை
தினம் தினம்
அக்கினியில் போட்டு
எடுக்கின்றனஉன் கரங்கள்.
தீக்குளித்து தீக்குளித்து என் உடல்
தினம் தினம்
வெந்து போவைதை விட
ஓரே தரம் வெந்து போவது மேல்.
புரிந்து கொள்ள மறுக்கின்றாய்
பிரிந்து விடு
இரங்க மறுக்கின்றாய்-
நீ..
இறந்து விடாதே!
நானே மறந்து மறைந்து விடுகின்றேன்.
அன்புடன்...
கவிதைக்குயில்..
ராகினி
ஜெர்மனி.
http://rahini.blogspot.com/http://thiraviyam.blogspot.com/
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்http://clearblogs.com/piriyaa/http://kuyil.mazhalaigal.com/
அன்புடன்...
கவிதைக்குயில்..
ராகினி
ஜெர்மனி.
http://rahini.blogspot.com/http://thiraviyam.blogspot.com/
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்http://clearblogs.com/piriyaa/http://kuyil.mazhalaigal.com/
isaikuyil@googlemail.com
Tuesday, April 17, 2007
தூறல்
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும் http://kuyil.mazhalaigal.com/

தூறல்
இதழை பருகத்துடிக்கும்
உனது கண்களை கண்டு
குடத்தில் இருந்த முகத்தை
மேலே கெண்டுவந்தது
ஓர் அண்ணப்பறவை
நீ..அள்ளி பருகிட.
நிலவாக நான்
இருக்க வேண்டும்
என்னை நீ..பார்ப்பதற்காய்
நெருப்பாக நான்
மாறவேண்டும்
மழையாய் நீ என்னை
அணைப்பதற்காய்.
ராகினி
Thursday, April 12, 2007
என் வாழ்க்கை பயணம்

என் வாழ்க்கை பயணம்
ஏக்கங்கள் தாகம் போலாகியபோது
உணர்வுகள் தடுமாறி
வலையில் அகப்பட்ட மீன் போல்
காதலில் சிக்கி தவித்து.
தனிமை யாய் இரவுப் பொழுதை
இசையோடு மொளனமாக்கி
தீராத வலியை பிழிந்தெடுக்கின்றது
நீ..திசைமாறியபோது.
செர்க்கம் என்ன
நரகம் என்ன நீ..
இல்லாத போது
என் வாழ்க்கை பயணம்
முடிந்து கொண்டே.. போகின்றது
ஆனா.. என் இதய சிம்மாசனத்தில்
உன்னை அமர வைத்த மனது போல்
என்றும் மாறதா மனது போல்
நீ.. மட்டுமே.. வாழ்ந்து கொண்டு
இருக்கின்றாய் இது உன் உயிர்.
ராகினி
Monday, June 05, 2006
என்னன்பே.. என்னென்பேன்.

என்னன்பே.. என்னென்பேன்.
என்னன்பே..உன்னைநான்
என்னென்பேன்.
நீ..விரட்டினாலும்
விலக முடியாது.
நீ..
ஒதுங்கினாலும் என்னால்
ஒதுங்கமுடியாது.
நாடி துடிப்பதுபோல்
உன் நினைவுகள்..
என்னை புதிப்பித்துக்...
கொள்கின்றது.
நீ சொல்லும் கவிதைகள்..
என்னை மலர..வைக்கின்றது.
நீ..தரும் இசை...
என்னை வாழவைக்கின்றது.
நீ...காட்டிச்செல்லும்அன்பும்.
உன் உதடுகள் தந்தகொஞ்சலும்
என் வழக்கமான..வேலைகளை..
எல்லாம் மறந்து போய்விடச் செய்கின்றது.
எனக்குள்
வேதனைகள்இருந்தாலும்.
சோகங்களுக்குள் புதைந்து
விடாமல்...
உன் நினைவுகளை தழுவிச்..செல்வதால்.
யுகம் கெண்ட வேதனைகளை
என் சாதனையாக்கி..விடுகின்றேன்.
உன்
நம்பிக்கைக்குள் நான் என்னும் கூட்டுப்புலுவாய்.....கிடக்கின்றேன்.
நான் வழி... போகத்தெரியாத
அப்பாவி ஆடாக இருந்தாலும்.
உன்
விழிக்குள் நான் வழியாகஇருந்து....
உன்னை வலியாக்காமல் ...
வழி நடத்திச் செல்வேன்.
ராகினி.
ஜேர்மன்
என் இறுதி மூச்சில்

என் இறுதி மூச்சில்
உன் அருகில் இல்லாததால் என் கண்ணீர் தொடர்கதையாகின்றது.
நான் ..எட்டாத நிலவாக இருப்பதால்.
நீ..இதயத்தால் கூட தொடமுடியவில்லை.
உன்னைநானஅடைவதென்பது.
கனவாகிப்போகின்றது.நீ..அந்த வானுக்கு சொந்தம் என்பதால்.
உன்னை சேர்வதும் சார்த்தியமா...
புரியவில்லை.
உன்னிடம் நான் கொண்ட காதல்
வானலவும் என்றும் குறையாதது.
உன்னை அடையும்வரை என் மூச்சு திணறிக்கொண்டே..இருக்கும்.
என் இறுதி மூச்சில் நான் ஓரே...
ஒருவரம் கேட்பேன்.
உன் இதயத்தில் ஒரு நிமிடமாவது என்னை அமர இடம்தரும்படி.
அப்போதே..நான் உன்னோடு
பலஆண்டுகள் வாழ்ந்த நிம்மதி
அடைவேன்.
ராகினி.
நீயே..என் தரமான சொத்து
நீயே..என் தரமான சொத்து அன்போ...
உன்னிடம் கேட்பது
காதல்..அல்ல.காதலுக்குள் இருக்கும் இதயத்தை.
நான் சுவாசிப்பது
உன்னை அல்ல....உன் கலங்கமற்ற உயிரை.
உன்னிடம் கேட்பது
நகையல்லஎன் புன்னகையை.
நான் கேட்டது.
உயிரற்ற பரிசல்ல
உன் உயிர் உள்ள நினைவுகள்.
அந்த நினைவுகளே..என்னிடம் பரிசாய்.
இருக்கும் போது
உயிரற்ற பரிசெதற்கு.
நீ..கிடைத்ததே..எனக்கு
மிகப்பொரிய சொத்து.
தரமாக நீ..இருக்கும்போது...
தரமற்றசொத்தெதற்கு.
பிரியமுடன் நீ ...
சுமக்கும்போது..பிரியமில்ல
உறவெதற்கு.
எது வந்தாலும் நீ..மட்டும்போதும்.
அதுவரை..நான் பிரியமுடன் வாழ்வேன்.
ராகினி
ஜேர்மன்.
Monday, March 06, 2006
செல்லமே..மனம் தவிக்குது

செல்லமே..மனம் தவிக்குதுநீ...எப்படி இருக்கின்றாய்
என்று பார்க்க முடியாத....
போதுதான்.
என் தலை இரண்டாகப்..
பிளக்கின்றது.
நன்றாக சாப்பிட்டாயா..?
நன்றா உறங்கினாயா...?
நீ..வேலைக்கு போய்க்
கொண்டிருக்கின்றேன்
என அறிவித்தால்
என் மனம் போறடிக்கொண்டு
இருக்கின்றதடா.
கவனமில்லாமல் நீ..பாதைகடந்து
சென்றுவிடுவாயா..?என்று.
நீ..அங்கும் இங்கும் பார்ப்பவனாக..
இருந்தால்
நீ.. பாதையையும் பார்த்து
பக்குவமாய் கடந்து
செல்வாய்என..என்னிக்கொள்வேன்.
ஆனால்..
நீ..தான் சொன்னாயே..
பார்க்கும் இடமெல்லாம்
உன் முகம் கேட்கும்
இசை எல்லாம் என் உருவம்.
என்று .
அதனால் தான் என் மனம்
தவியாய் தவிக்குதே.
நீ..எப்பவும் நலமுடன்
இருக்க வேண்டும்.
நான் வாழும் காலம் வரையாவது.
நீ..வாழ வேண்டும்.
அதன் பின்பும் என்னோடு
நீ..வந்திட வேண்டும்.
ராகினி
ஜேர்மன்.
Sunday, March 05, 2006
என் செல்லமே..வருவாயா..?

என் செல்லமே..வருவாயா..?
மொட்டாகிப் பூவாகி...
நான் மலர்ந்தென்ன.
ஆயிரம் ஆயிரம் கனவுகளைச்..
சுமந்து இரவில் தூக்கம் கலைந்து.
உன்னைக்கான என் மனம்
தவிக்கின்றதே..நித்தம் நித்தம்.
அதை அறிவாயா.. என்செல்லமே.
பார்ப்போமா..இனைவோமா..
சேர்வோமா.. வாழ்வோமா.
புரியவில்லை.
ஆனால்..நான் உனக்கு
குட்டி
நீ..எனக்கு
செல்லம்.
என்றோ...ஒருநாள் நான்
உன் மனைவியாக வருவேன்
என்ற நம்பிக்கை ஒளியில்...
உன் முகத்தைப் பார்த்தபடி
மௌனமாகி..
ஓரத்தில் கண்கள் கசிய
காளையவன் இதயம்தேடி..
இந்தப்பாவையவள்...
காத்திருக்கின்றாள்.
ராகினி.
ஜேர்மன்
செல்லத்தின் இனியவள்

செல்லத்தின் இனியவள்
ச...ஏன்டா... எனை சந்தித்தாய்
உன் விழிகள் எனை பார்த்ததும்.
என் விழிகள்..உனை சரனடைந்ததே.
உனை பார்க்கக்கூடாது என்று
என் கண்களை இறுக்கிமூடினாலும்
அப்பவும் உன் கண்கள் தானே..
என்னை தழுவுகின்றது.
காலை எழுந்து..கண்ணாடி பார்த்தால்
உன் கண் சிமிட்டல் எனை..
கொள்ளையிட்டுக் கொள்கின்றது.
ஏன்டா..என்னை பார்க்கின்றாய்
குட்டி என செல்லமாய் அழைத்து.
உன்னுள் சிறை வைத்தது போதாத.. .. ..
போதும் உன் பார்வை இந்த
இனியவள் என்றும் உன்னவள்
போதுமடா....போதும் .
ராகினி.
ஜேர்மன்


.jpg)

